தமிழ்நாட்டில் 52 பெரிய கோயில்களில் செல்போன்களை எடுத்துச் செல்ல இன்று முதல் தடை விதிப்பு அமலாகிறது.
செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க, கோயில் வளாகத்தில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதிக்கு ஏற்பாடு.
இணை ஆசிரியர் Dr எஸ்.நாடிமுத்து

செய்தியைக் குரல் வழியே கேட்க இயக்க பொத்தானை அழுத்தவும்
தமிழ்நாட்டில் 52 பெரிய கோயில்களில் செல்போன்களை எடுத்துச் செல்ல இன்று முதல் தடை விதிப்பு அமலாகிறது.
செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க, கோயில் வளாகத்தில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதிக்கு ஏற்பாடு.
இணை ஆசிரியர் Dr எஸ்.நாடிமுத்து

திருப்பதி பிரம்மோத்ஸவ திருவிழா – பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்! நமது செய்தியாளர் க.ஏழுமலை

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று (அக்டோபர் 07) முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 12, 13, 14 மற்றும் அக்டோபர் 18, 19, 20 ஆகிய தேதியில் தரிசனம் செய்ய https://ttdevasthanams.ap.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. நமது செய்தியாளர் ப.நெடுமாறன்

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற 14 வைணவ திவ்ய தேச கோயில்களை ஒரே நாளில் தரிசிக்க கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஆன்மிக சுற்றுலா பேருந்தை இயக்குகிறது. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு கும்பகோணம் திரும்பும் வகையில் சேவை இயக்கப்படுகிறது. சீர்காழி தாடாளன் பெருமாள், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருநகரி கல்யாண ரங்கநாதர், திருமணிக்கூடம் வரதராஜ வரதராஜர் உள்ளிட்ட 14 வைணவ தலங்களில் தரிசனம் செய்யலாம் ஆன்மிக சுற்றுலா… Continue reading ஒரே நாளில் 14 வைணவ கோயில்களை தரிசிக்கும் வகையில் அரசு சிறப்பு பேருந்து!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ‘நடுபழநி’ என்றும் பக்தர்களால் பரவலாக அழைக்கப்படுகிறது.இந்த கோவிலில் சுமார் 2 அடி உயரமுள்ள மரகத முருகன் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து விலைமதிப்பற்ற மரகத முருகன் சிலையை திருடி சென்றுள்ளனர். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்